உலக நிலைபேறான பயணம் மற்றும் விருந்தோம்பல் விருதுகளில் ஹோட்டல் எம்போரியம் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கௌரவம் !

Published By: Digital Desk 7

21 Oct, 2024 | 05:31 PM
image

தமது இணை நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அண்டி டி சில்வாவிற்கு, முதலாவது உலக நிலைபேறான பயணம் மற்றும் விருந்தோம்பல் விருது வழங்கும் விழாவில் (World Sustainable Travel & Hospitality Awards - WSTHA) ‘World’s Leading Sustainability Leader of Tomorrow 2024’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில், உயர்ரக ஹோட்டல் வசதிகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் Hotel Emporium (ஹோட்டல் எம்போரியம்) பெருமிதம் கொள்கிறது.

உலகளாவிய விருந்தோம்பல் துறையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அண்டியின் அர்ப்பணிப்பை இவ்விருது எடுத்துக்காட்டுவதோடு, நிலைபேறான பயணத்தில் இலங்கையர் ஒருவர் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

COP28 இல் ஆரம்பிக்கப்பட்ட உலக நிலைபேறான பயணம் மற்றும் விருந்தோம்பல் விருதுகள், பாரம்பரிய சுற்றுலா சேவைகளுக்கு அப்பால் நிலைபேறான தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களை கௌரவிக்கின்றன.

சூழல் நட்பு நடைமுறைகளைச் செயற்படுத்துதல், கலாசாரப் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்பான பயண அனுபவங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட அதன் முக்கிய முயற்சிகள் உள்ளிட்ட, நிலைபேறான பயணம் மற்றும் சுற்றுலாவில் மாற்றத்தையும் சாதகமான தாக்கத்தையும் விரைவுபடுத்துவதில் நிறுவனம் வகிக்கும் பங்கை இந்த விருது எடுத்துக் காட்டுகின்றது.

Hotel Emporium ஆனது, அண்டி டி சில்வாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு சிறியளவிலான தொடக்கத்திலிருந்து இன்று உலகளாவிய தொழில்துறையின் தலைவராக வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் 20,000 ஹோட்டல்களில் சேவை செய்வதோடு, 40 நாடுகளில் அது இயங்கி வருகிறது.

ஆடம்பரத்திலோ அல்லது தரத்திலோ எவ்வித விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ளாமல் நிலைபேறான தன்மையை வலியுறுத்தும் இந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான வசதிகளின் சேகரிப்புகள் ஆகியன, விருந்தோம்பல் துறையில் அண்டியின் முன்னோக்கு சிந்தனைக்கு சான்றாக விளங்குகின்றன.

Hotel Emporium பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் இணை நிறுவுனருமான அண்டி டி சில்வா இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“எமது நிலைபேறான முயற்சிகளுக்காக எமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரமானது, உண்மையிலேயே ஒரு கௌரவமாகும்.Hotel Emporium ஆனது, எனது மாமாவான லலித் ஜேம்ஸ் மூலம் 1999 இல் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டதோடு, 2003 இல் அது கூட்டிணைக்கப்பட்டது. இரண்டு தசாப்த பயணத்தைத் தொடர்ந்து, தற்போது உயர் ரக ஹோட்டல் வசதிகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாக நாம் வளர்ந்துள்ளோம்.

இதற்காக உலகெங்கிலும் உள்ள எமது வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாம் செய்யும் அனைத்து விடயங்களிலும் நிலைபேறான தன்மையே மையமாக விளங்குகின்றது. நாம் தனித்துவமான மற்றும் பொறுப்பான பயண அனுபவங்களை வழங்கும் அதே வேளையில் எமது பூமியைப் பாதுகாப்பதிலான எமது முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம்.

ஹோட்டல் எம்போரியத்தின் நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பானது, அதன் குடும்பத்திலிருந்து தொன்று தொட்டு ஆழமாக வேரூன்றியுள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக பூமியைப் பாதுகாப்பது தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, LiquiFill தொகுதி மற்றும் ECO POD உள்ளிட்ட புத்தாக்கமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு உதவியது. LiquiFill ஆனது, குளியலறைக்கு அவசிமான திரவங்களை திறனாக நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட இயந்திரமாகும்.

இவை தொழிலாளர் செலவைக் குறைக்கும் அதே வேளையில், பிளாஸ்டிக் கழிவுகளையும் வெகுவாகக் குறைக்கின்றன. ECO POD ஆனது, ஒரு தொழில்துறை முன்னோடியான தயாரிப்பாகும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலான மாசுபாடு மற்றும் சூழல் மாசடைவு பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் வகையிலான, மக்கும், பூச்சிய பிளாஸ்டிக்கிலான, பயன்படுத்த எளிதான மாற்றீட்டை இது வழங்குகிறது.

இந்த வருடத்தின் WSTHA நிகழ்வானது, UN இன் நிலைபேறான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் மக்கள், பூமி, இடம், செழிப்பு, கூட்டாண்மை ஆகியவற்றின் முழுமையான சாதகமான கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. கௌரத்திற்குரிய WSTHA ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 21 பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

அனைத்து உள்ளீடுகளும் Nova Business School ஐச் சேர்ந்த நிலைபேறான வணிக மாணவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டதோடு, WSTHA ஆலோசனைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. 7 வார கால அவகாசத்தில், தொழில் வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் இதற்காக வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதிக வாக்குகளைப் பெற்றவர் அந்தந்த பிரிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு விருந்தோம்பல் துறையானது சுற்றுச்சூழலுக்கு உகந்த, புத்தாக்கமான தேவைகளை தழுவ வேண்டும் எனும் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதால், இந்த கௌரவிப்பானது, மாசடைவு மற்றும் நிலைபேறற்ற நடைமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஹோட்டல் எம்போரியத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது.

Hotel Emporium மற்றும் அதன் தற்போதைய முயற்சிகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு: https://hotelemporium.com/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவுடன் இலங்கையில் அறிமுகமான கையடக்க...

2025-02-13 15:57:06
news-image

கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கு எதிரான செயலணி...

2025-02-13 13:03:25
news-image

சியெட் இலங்கையில் 10வது முதற்தர S-I-S...

2025-02-12 16:03:43
news-image

தேசிய மனநல நிறுவகத்தின் வாழ்வை பிரகாசமாக்குகின்ற...

2025-02-12 12:46:29
news-image

Acuity Partners ஐ முழுமையாக கையகப்படுத்தி,...

2025-02-12 12:33:05
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக...

2025-02-11 18:03:15
news-image

MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன்...

2025-02-11 17:50:42
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08