வைத்தியரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை ; இருவர் கைது

21 Oct, 2024 | 03:39 PM
image

தலங்கமை பிரதேசத்தில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியரிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார். 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகளின் மொத்த பெறுமதி 7 இலட்சம் ரூபா ஆகும்.

இந்த கொள்ளை சம்பவம் வைத்தியரின் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று (21) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39