யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தொடர்புடைய 10 சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வித்தியா கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்கள் கடந்த மாதம் 28 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன், அதற்கு எதிர்ப்புகள் வெளியாகியிருந்தது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.