(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பத்து நாடுகள் பங்குபற்றிய 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் நியூஸிலாந்து உலக சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது.
இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 32 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
உலக சம்பியனான நியூஸிலாந்து உலகக் கிண்ணத்துடன் சுமார் 70 கோடி ரூபா பணப்பரிசையும் தனதாக்கிக்கொண்டது.
இதன் மூலம் இருபாலாருக்கும் நடத்தப்பட்டுவரும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நியூஸிலாந்துக்கு முதலாவது உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த வரலாற்றுப் பெருமை அந் நாட்டின் மகளிர் அணியை சாருகிறது.
அமேலியா கேரின் அற்புதமான சகலதுறை ஆட்டம் நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது.
இரண்டு நாடுகளினதும் ஆடவர் அணியோ மகளிர் அணியோ ரி20 உலகக் கிண்ணத்தை வென்றிடாத நிலையில் இரண்டு அணிகளும் முதல் தடவையாக ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற வைராக்கியதுடன் இறுதிப் போட்டியை எதிர்கொண்டன.
அமேலியா கேரின் அற்புதமான சகலதுறை ஆட்டம் நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது.
தென் ஆபிரிக்கா தொடர்ச்சியான இரண்டாவது தடவையாகவும் (2023, 2024), நியூஸிலாந்து முதல் இரண்டு (2019, 2010) அத்தியாயங்களைத் தொடரந்து மூன்றாவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் ஒன்றையொன்று எதிர்த்தாடின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீராங்கனை ஜோர்ஜியா ப்ளிம்மர் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் அனுபவசாலிகளான சுஸி பேட்ஸ், அமேலியா கேர் ஆகிய இருவரும் பொறுமைகலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர்.
சுஸி பேட்ஸ் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தபோது சொஃபி டிவைன் (6) ஆட்டம் இழந்தார்.
ஆனால், அமேலியா கேர், ப்றூக் ஹாலிடே ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சற்று பலமான நிலையில் இட்டனர்.
ப்றூக் ஹாலிடே 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் அமேலியா கேர் 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மெடி க்றீன் 12 ஓட்டங்களுடனும் இசபெல்லா கேஸ் 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவி இரண்டாவது நேரடியான தடவையாக உலகக் கிண்ணத்தைத் தவறவிட்டது.
அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் 41 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், தஸ்மின் ப்றிட்ஸ் 17 ஓட்டங்களுன் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்காவின் அடுத்த விக்கெட்கள் வரிசையாக வீழ்ந்தன.
6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த தென் ஆபிரிக்கா, 9 விக்கெட்களை 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்து நியூஸிலாந்திடம் சரணடைந்தது.
லோரா வுல்வார்ட் 33 ஓட்டங்களைப் பெற்றார்.
க்னோ ட்ரையொன் (14), ஆன்எரி டேர்க்சன் (10) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற மற்றைய இருவராவர்.
பந்துவீச்சில் அமேலியா கேர் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரோஸ்மேரி மாய்ர் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி மற்றும் தொ டர்நாயகி: (இறுதிப் போட்டியில் 43 ஓட்டங்கள், 24 - 3 விக்., தொடரில் 135 ஓட்டங்கள், 15 விக்கெட்கள்) அமேலியா கேர்
இரண்டு அணிகளும் முதல் தடவையாக ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.
159 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை யும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
விரிவான செய்தி தொடரும்...
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM