நாம் எம்முடைய சருமத்தை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும் என வைத்தியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ஏனெனில் எம்முடைய சருமம் தான் சுற்றுச்சூழல் மாசு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அல்ட்ரா வயலட் கதிர்களின் ஊடுருவல் ஆபத்தை விளைவிக்கும் ரசாயனம் ஆகிய காரணிகளிடமிருந்து பாதுகாக்கிறது.
இதனால் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய சருமத்தின் தன்மையை தோல் சிகிச்சை நிபுணரிடம் விவாதித்து, ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுபோன்ற மாசுக்களிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் தோலை பாதுகாக்க பிரத்யேக கிறீம் மற்றும் லோஷன் ஆகியவற்றை நாளாந்தம் பயன்படுத்த வேண்டும்.
இதனை கடந்து எம்முடைய சருமம் வறண்டு விட்டால் தோலின் உணர்வு நிலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக தோலிற்கான நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.
மேலும் ஒவ்வொருவருடைய உடலை தற்காத்துக் கொண்டிருக்கும் தோலுக்கென பிரத்யேக பி ஹெச் வேல்யூ இருக்கிறது.
அதனை தெரிந்து கொண்டு நாம் எம்முடைய சருமத்தை பாதுகாக்க வேண்டும்.
தோல் சிகிச்சை நிபுணர்கள் இதற்காக மூன்று வகையினதான க்றீம்களை பரிந்துரை செய்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்களின் தோலின் தன்மைக்கேற்ப அதை புரிந்து கொண்டு, வாங்கி பாவித்து, தோலின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.
மேலும் தோல் என்பது ஐந்து முதல் ஏழு அடுக்குகளை கொண்டது. இதனை தோல் சிகிச்சை நிபுணர்களிடம் விவாதித்து, தோலின் தன்மையை தெரிந்து கொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக கிறீம்களை பயன்படுத்தி, தோலின் ஆரோக்கியத்தை காத்திட வேண்டும்.
தற்போதைய சூழலில் இணைய மற்றும் இளைய தலைமுறையினர் ஓக்டிவ் என்றொரு விடயத்தையும் அவர்களின் முகப்பொலிவிற்காகவும், சருமத்தின் ஆரோக்கியத்திற்காகவும் பாவிக்கிறார்கள்.
இதனையும் உங்களுடைய தோல் சிகிச்சை நிபுணரின் அறிவுறுத்தலின் பேரில் பாவிக்க தொடங்க வேண்டும்.
- வைத்தியர் தீப்தி
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM