மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கரவண்டி விபத்து; ஒருவர் பலி

Published By: Digital Desk 2

20 Oct, 2024 | 05:42 PM
image

கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமரகீர்த்திகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று துவிச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் நேற்று சனிக்கிழமை (19) தெரிவித்தனர்.

கரந்தெனிய, அமரகீர்த்திகம பிரதேசத்தில் வசிக்கும் 81 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பொரகந்தவிலிருந்து அமரகீர்த்திகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையிலிருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்து பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரந்தெனிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09