வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் கடந்த மாதம் 23 திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குற்பட்ட காலப்பகுதியில் 160 நெல் மூட்டைகளும் 6 குறுணல் மூட்டைகளும் திருட்டுப் போயுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் நேற்று (02) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டார். 
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அரிசி ஆலையில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சில நெல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.