சீனாவில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மீத்தேன் வெடிப்பில் சிக்கி 12 தொழிலாளர்கள் பலியானதுடன் மேலும் பன்னிருவர் காயமடைந்தனர்.

டஃபாங் கவுன்டி பகுதியில் உள்ள லியுலோங் நகரமைப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையிலேயே இவ்விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தினால், பன்னிரண்டு தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் அபாயகரமான மீட்புப் பணியில் சுமார் இரண்டாயிரம் வீரர்கள் இறங்கினர். என்றபோதும், பன்னிருவரில் ஒருவரையேனும் உயிருடன் மீட்க முடியாமல் போனது. உயிரிழந்த பணியாளர்களின் உடல்கள் இன்று காலையே மீட்கப்பட்டன.