கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவரது காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பியதாச கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.