(நெவில் அன்தனி)
ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை 8 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து, 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இதன் படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியஸிலாந்தும் தென் ஆபிரிக்காவும் விளையாடவுள்ளதுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக புதிய அணி ஒன்று சம்பியனாவது உறுதியாகி உள்ளது.
மந்த கதி தன்மையைக் கொண்ட ஆடுகளத்தில் இரண்டு அணிகளும் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமம் எதிர்கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.
சுஸி பேட்ஸ் (26), ஜோர்ஜியா ப்ளிம்மர் (33) ஆகிய இருவரும் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் அதனை சாதகமாக்கிக்கொள்ளத் தவறினர்.
அவர்கள் இருவரைவிட இசபெல்லா கேஸ் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் ப்றூக் ஹாலிடே 18 ஓட்டங்களையும் அணித் தலைவி சொஃபி டிவைன் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் டியேந்த்ரா டொட்டின் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அஃபி ஃப்ளெச்சர் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்ப வீராங்கனைகள் அதிரடியில் இறங்கி இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மந்தகதி தன்மைகொண்ட ஆடுகளத்தில் அவர்களால் ஓட்டங்களை சுலபமாக பெறமுடியமால் போனது.
அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் (15), கியான ஜோசப் (12) ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் பிரகாசிக்காதது மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
மத்திய வரிசையில் ஸ்டெஃபானி டெய்லர் (13), டியேந்த்ரா டொட்டின் (33), அஃபி ஃ;ளெச்சர் (17), ஸாய்டா ஜேம்ஸ் (14) ஆகியோர் கடுமையாக போராடிய போதிலும் அவர்களால் அணியை வெற்றி அடையச் செய்ய முடியாமல் போனது.
பந்துவீச்சில் ஈடன் கார்சன் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஈடன் கார்சன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM