பெரகல, வெல்லவாய வீதியில் பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து!

Published By: Vishnu

18 Oct, 2024 | 06:24 PM
image

பெரகல, வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று முன்னால் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை அக்கராசிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பெரகலைக்கு சென்றுள்ளார்.

மனைவி தங்க நகையை மூலம் பணம் பெற்று கணவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மனைவி திரும்பிச் சென்றபோது முச்சக்கர வண்டியில் ஏறாமல் பெரகல – அக்கராசிய பஸ்ஸில் வந்துள்ளார்.

அங்கு முச்சக்கரவண்டியை அதிவேகமாக ஓட்டிக்கொண்டு பஸ்ஸின் பின்னால் கணவர் வந்துள்ளார்.

இதேவேளை, பெரகல - வெல்லவாய வீதியின் கல் கந்த பிரதேசத்தில், எதிரே வந்த வெல்லவாய - பண்டாரவளை பஸ்ஸுடன்  மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34