எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்கெடுப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்ட விதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,
விசேட தேவையுடைய வாக்காளர்களின் உதவியாளர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லாதவராக இருத்தல் வேண்டும்.
மேலும், விசேட தேவையுடைய வாக்காளர்களின் உதவியாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ, பிரதேச முகவராகவோ அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது.
விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடனழைத்துச் செல்வதற்குத் தகுதிச் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், பிரதேச செயலகங்களில், கிராம அலுவலர் அலுவலகங்களில் அல்லது www.election.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM