அவாஸ்குலர் நெக்ரோசிஸ் எனும் எலும்பு திசு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

18 Oct, 2024 | 05:10 PM
image

எம்மில் சிலருக்கு விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். அந்த விபத்தில் எலும்பில் அடிபட்டிருக்கலாம். ஆனால் அந்தத் தருணத்தில் வலியும், பாதிப்பும் அதிகமாக இருக்காது. 

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு இரவில் உறங்கும் போது அடிபட்ட பகுதியில் வலியை உணரலாம். இத்தகைய வலியுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மருத்துவ மொழியில் வைத்தியர்கள் அவாஸ்குலர் நெக்ரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என தெரிவிக்கிறார்கள்.

அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்பது ரத்த ஓட்டம் முழுமையாகவும், செறிவாகவும் இல்லாததால் எலும்பு திசுக்கள் மரணம் அடைவதை குறிப்பிடுகிறது. இதனை ஓஸ்டியோ நெக்ரோசிஸ் என்றும் குறிப்பிடுவர். 

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு எந்த தருணத்தில் வேண்டுமானாலும் சிறிய அளவிலான எலும்பு முறிவுகள் ஏற்படக்கூடும்.

விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு உண்டாகி இருந்தால் அதன் காரணமாக எலும்பின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப் பட்டிருக்கலாம் . 

அல்லது ஸ்டீராய்டு மருந்தினை இயல்பான அளவை விட கூடுதலாக பாவித்திருக்கலாம் அல்லது நாளாந்தம் மது அருந்துவதால் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். 

அத்துடன் இத்தகைய பாதிப்பு முப்பது வயதிற்கு மேல் ஐம்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பதனையும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி இரு முழங்கால்கள் வலி ஆகியவை இதன் முதன்மையான அறிகுறியாகும். 

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவங்களாக படிந்திருந்தாலும் இத்தகைய பாதிப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.

இத்தகைய பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே, எம் ஆர் ஐ மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனையும் எலும்பின் திறன் குறித்த பிரத்யேக பரிசோதனையும் மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். 

பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.‌

இதனுடன் கட்டாய ஓய்வு, இயன்முறை பயிற்சி, மின்னதிர்வுடன் கூடிய தூண்டல் சிகிச்சை ஆகிய நிவாரண சிகிச்சையையும் மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.  

வெகு சிலருக்கு மட்டும் அப்பகுதியில் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை தருவார்கள்.

வைத்தியர் ராஜ் கண்ணா
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்த நாளங்களில் ஏற்படும் அனியூரிஸம் பாதிப்பிற்குரிய...

2024-11-08 15:42:09
news-image

பாத வெடிப்பு பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2024-11-06 17:34:15
news-image

முதுகு வலிக்கான நிவாரணம் தரும் அங்கியை...

2024-11-05 19:33:05
news-image

அக்யூட் ஃபிப்ரைல் இல்னஸ் எனும் கடுமையான...

2024-11-04 17:07:17
news-image

பெண்மணிகளுக்கு ஏற்படும் பைலோட்ஸ் கட்டி பாதிப்பிற்குரிய...

2024-11-02 14:12:41
news-image

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் ஹெர்னியா பாதிப்புக்குரிய...

2024-11-01 18:42:51
news-image

மீடியல் டைபியல் ஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் எனும்...

2024-10-30 15:54:33
news-image

கேங்க்லியன் நீர்க்கட்டி எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-10-29 16:09:36
news-image

ஒட்டோமைகோசிஸ் எனப்படும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-10-28 17:20:21
news-image

சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-10-26 18:35:49
news-image

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி நிறுத்தப்...

2024-10-25 05:59:15
news-image

நீர்ச் சத்து குறைபாட்டின் காரணமாகவும் சிறுநீரக...

2024-10-23 18:28:12