கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

18 Oct, 2024 | 05:08 PM
image

சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜே. கே. சந்துரு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, சுப்பர் சுப்பராயன், ஜோன் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். 

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் கதையின் நாயகியான கீர்த்தி சுரேஷ் யார்? என்ற வினாவை கதாபாத்திரங்கள் மூலம் எழுப்பி அதற்கு டைட்டிலை விடையாக அளித்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

இது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும்...

2026-08-11 20:58:57
news-image

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-08-11 16:51:42
news-image

நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ அம்...

2026-08-11 16:21:14
news-image

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்...

2026-08-11 16:19:16
news-image

சிக்கலில் சிக்கிய ‘சியான்’ காணொளியை நீக்கினார்..!

2026-08-11 13:07:57
news-image

திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.....

2026-08-11 10:20:42
news-image

சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

2026-08-10 17:11:32
news-image

ஜேம்ஸ் வசந்தனின் துள்ளல் இசையாக வெளியாகியுள்ள...

2026-08-10 17:11:21
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-10 17:09:05
news-image

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து வழங்கும் லேடி...

2026-08-10 16:51:16
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் யாஷ்...

2026-08-10 16:44:49
news-image

சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகப்படுத்தும் 45வது...

2026-08-10 16:42:52