(நெவில் அன்தனி)
துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை நொக் - அவட் செய்து ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தகுதிபெற்றது.
கடந்த வருடம் மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.
அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
தென் ஆபிரிக்காவின் வெற்றியில் அயாபொங்கா காக்காவின் துல்லிய பந்துவீச்சு, ஆன்எக் பொஷ் குவித்த அரைச் சதம், லோரா வுல்வார்டின் சிறந்த துடுப்பாட்டம் என்பன முக்கிய பங்காற்றின.
தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது தஸ்மின் ப்றிட்ஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.)
ஆனால், லோரா வுல்வார்ட் ஆன்எக் பொஷ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 65 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
லோரா வுல்வார்ட் 37 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (121 - 2 விக்.)
வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 14 ஓட்டங்களை ஆன்எக் பொஷ், க்ளோ ட்ரையொன் ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.
இப் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஆன்எக் பொஷ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். க்ளோ ட்ரையொன் ஆட்டம் இழக்காமல் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.
க்றேஸ் ஹெரிஸ் (3), ஜோர்ஜியா வெயாஹாம் (5) ஆகிய இருவரினது விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது.
பெத் மூனியும் பதில் அணித் தலைவி தஹிலா மெக்ராவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர்.
தஹிலா மெக்ரா 27 ஓட்டங்களைப் பெற்றார்.
16.5 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னரே அவுஸ்திரேலியாவின் ஓட்ட வேகம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது.
எலிஸ் பெரி 23 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.
ஃபோப் லிச்ஃபீல்ட் 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் அயாபொங்கா காக்கா 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நொன்குலுலென்கோ 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஆன்எக் பொஷ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM