(நெவில் அன்தனி)
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3ஆவதும் திர்மானம் மிக்கதுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் முன்வரிசை வீரர்களின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் 9 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது.
அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் இலங்கை வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.
2016இல் நடைபெற்ற தோடர் சமநிலையில் முடிவடைந்ததுடன் 2020இலும் 2021இலும் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டாவது போட்டியில் நிர்ணயித்த 163 ஓட்டங்கள் என்ற அதே வெற்றி இலக்கை நோக்கி இந்தப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 32 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்கள் இருவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 22 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ஆரம்பத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை வேகமாக பெற்றார். அவருக்கு இணையாக குசல் பெரேராவும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 76 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை இலகுவாக்கினர்.
குசல் மெண்டிஸ் 50 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 68 ஓட்டங்களுடனும் குசல் பெரேரா 36 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 55 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
இரண்டாவது போட்டியில் அரைச் சதம் குவித்த எவின் லூயிஸ் முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய 12ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களாக இருந்தது.
முன்வரிசையில் ப்றெண்டன் கிங் 23 ஓட்டங்களையும் அணிக்கு மீளழைக்கப்பட்ட ஷாய் ஹோப் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் அணித் தலைவர் ரோவ்மன் பவல், குடாக்கேஷ் மோட்டியும் ஆகிய இருவரும் 26 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிது தெம்பைக் கொடுத்தனர்.
மோட்டி 15 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து ரோவ்மன் பவல் 7ஆவது விக்கெட்டில் ரொமாரி ஷெப்பர்டுடன் மேலும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ரோவ்மன் பவல் 27 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்; தொடர்நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM