நடிகர் அமல் தேவ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சீன் நம்பர் 62' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்யேகப் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆடம் ஜாஃபர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சீன் நம்பர் 62' எனும் திரைப்படத்தில் அமல் தேவ், கோகிலா கோபால், ஆர் ஜே வைத்தி, ஜாய்ஸ் எலிசபெத், ரகந்த் கதிரவன், ஐஸ்வர்யா நந்தன், ராஜ் பால், வசந்த் பெஞ்சமின், சைமோன், பார்வதி, மனிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை நவ முகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேணு ஜி. ராம் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்த இந்த திரைப்படம் இம்மாதம் 25 ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வழக்கமான திரில்லர் திரைப்படமாக இல்லாமல் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்க தயாராக இருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM