மேல் மாகாணத்தில் டெங்கு பரவுதல் எச்சரிக்கை வழங்கியிருந்த போதிலும் தற்போது கொழும்பு நகருக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளமை அறியப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் முதல் 10 நாட்களுக்கும் மாத்திரம் கொழும்பு நகருக்குள் 102 நோயாளர்கள், இனங் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர பிரதான மருத்துவ அதிகாரி ரூவான் விஜயமுனி தெரிவித்தார்.