நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்தினுள் ஒருவர் இறந்து தரையில் கிடப்பதாக நுவரெலியா மாநகர சபை ஊழியர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபருடன் இன்னுமொரு பெண்ணும் கடந்த 5 நாட்களுக்கு முன்பிலிருந்து நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் யாசகம் பெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிக குளிர் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM