முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட, கூட்டு எதிரணியின் மேதினக் கூட்டத்தில் பங்குபற்றிய நபர் ஒருவர் மது போதையில் வீதியில் அட்டகாசம் செய்துள்ளார்.

பேரணி முடிந்து பஸ்சில் சென்றுக்கொண்டிருந்த குறித்த நபர், திடீரென பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியில் சென்றுக்கொண்டிருந்த காரின் மீது ஏற முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து காரின் உரிமையாளர் குறித்த நபரை திட்டியதை தொடர்ந்து மீண்டும் பஸ்ஸில் ஏறிச் சென்றுள்ளார். இச்சம்சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.