விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Published By: Digital Desk 7

17 Oct, 2024 | 09:42 AM
image

மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (16)  புதன்கிழமை  உயிரிழந்துள்ளார்.

காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவரே   உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 2ஆம் திகதி பேசாலை - மன்னார் வீதியால் தனது வீட்டை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது  எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் - பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மூன்றாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் யாழ். போதனா  வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும்,அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12