விவசாயத்துறையை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவர நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை - ஜனாதிபதி 

16 Oct, 2024 | 05:56 PM
image

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விவசாயம்,காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அந்த அமைச்சுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆய்வு செய்த ஜனாதிபதி, அத்திட்டங்கள் ஓரளவு வெற்றியடைந்தாலும் அதன் மூலம் கிராமப்புற வறுமை எந்த அளவிற்கு தீர்க்கப்பட்டுள்ளது என்ற கேள்வியுள்ளதாகவும் தெரிவித்தார். 

எனவே எதிர்காலத்தில் கிராமிய வறுமையை ஒழிப்பதே கிராமிய அபிவிருத்தித் திட்டங்களின் பிரதான இலக்காக இருக்க வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க புதிய விரிவான செயற்றிட்டத்தின் தேவையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 

வறுமை என்பது பணப் பற்றாக்குறை மாத்திரமன்றி, சமூகத்தில் ஒரு பிரிவினரை ஓரங்கட்டுவது மற்றும் ஒரு பாரிய சமூகப் பேரழிவு என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான இலக்குமயப்பட்ட செயற்றிட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், திட்டப் பணிப்பாளர்கள் உட்பட அமைச்சின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி!

2025-12-16 11:34:02
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 11:35:21
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28