சர்வதேச கிரிக்கட் பேரவையான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கட் அணிகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு ஆறாவது இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும் குறித்த தரப்படுத்துதலில் தென்னாபிரிக்கா முதலாவது இடத்தையும், இரண்டாம் ,மூன்றாம் இடங்களில் முறையே அவுஸ்ரேலியாமற்றும் இந்திய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

அத்தோடு நான்காம்,ஐந்தாம் இடங்களில் நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், ஆறாவது இடத்தில் இலங்கை அணியும், ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.