கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான தலைவர் - எஸ்.எம்.சந்திரசேன

16 Oct, 2024 | 05:25 PM
image

(இராஜதுரை ஹஷான்) 

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பலவீனமான அரச தலைவர் என்பதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. நாங்களும் இன்று அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,  

ஜனாதிபதித் தேர்தல் தேசிய மட்டத்தை கொண்டது, பொதுத்தேர்தல் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாக கொண்டது. 

எனது அரசியல் பயணத்தில் அநுராதபுரம் மாவட்டத்துக்கு இயலுமான வகையில் சேவையாற்றியுள்ளேன். ஆகவே அநுராதபுரம் மாவட்ட மக்கள் என்னை இம்முறையும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வார்கள்.  

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயிகளின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானங்களை எடுத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.  

ஏனெனில் விவசாய மாவட்டத்தையே நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை தேவைகளையே நான் முன்னிலைப்படுத்துவேன். 

கோட்டபய ராஜபக்ஷ ஒரு பலவீனமான அரச தலைவர் என்பதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது,அதேபோன்று நாங்களும் இன்று அரசியலில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம்.  

எவ்விதமான தூரநோக்கற்ற வகையில் உரம் தொடர்பில் எடுத்த தீர்மானத்தால் தான் நாடு நெருக்கடிக்குள்ளானது. தவறான தீர்மானத்தை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன்.இருப்பினும் எனது கருத்துக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14