இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் 

16 Oct, 2024 | 01:17 PM
image

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் கியூபா தூதுவர் இடையிலான கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்ட தூதுவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கை மற்றும் கியூபாவுக்கிடையில் காணப்படும் 65 வருடங்களைக் கடந்த நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி, கியூபாவின் உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பித்தல், இலங்கையின் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கென வைத்திய, விளையாட்டுக் கல்வி தொடர்பான புலமைப்பரிசில் வழங்கல் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கடந்த பல வருடங்களாக கியூபா முகங்கொடுத்த பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், கியூபா தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பிரதமர், கியூபா பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்ற உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, கியூபா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் முதலானோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04
news-image

நாட்டில் கையிருப்பிலுள்ள எரிபொருள் எவ்வளவு காலத்திற்குப்...

2026-03-17 11:31:35
news-image

எதிர்காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய சூழல்...

2026-03-17 11:26:30