(க.கமலநாதன்)

Image result for மக்கள் விடுதலை முன்னணி virakesari

தற்போது நாட்டில் இடம்பெறும் தொழிலாளர் உரிமைக்களுக்கான போராட்டங்களை சரத் பொன்சேகாவை கொண்டு அடக்க மைத்திரி ரணில் அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எவராலும் தொழிலாளர்களை அடக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் லால் காந்த தெரிவித்தார்.

தொழிலாளர்களை அடக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று மைத்திரி ரணில் அரசாங்கத்தை எச்சரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்பு பீ. ஆர்.சீ. மைதானத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.