(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் கம்ரன் குலாம் குவித்த சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் பலமான நிலையை நோக்கி நகர்கிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பாகிஸ்தான் அதன் முதல் இரண்டு விக்கெட்களை 19 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.
எனினும் சய்ம் அயூப், கம்ரன் குலாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர்.
சய்ம் அயூப் 77 ஓட்டங்களைப் பெற்றார்.
நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான கம்ரன் குலாம் அப் போட்டியில் துடுப்பெடுத்தாடவோ பந்துவீசவோ இல்லை. மாறாக களத்தடுப்பில் மாத்திரம் ஈடுபட்டார்.
அதன் பின்னர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இன்றைய போட்டியில் அறிமுகமான கம்ரன் குலாம், ஓர் அனுபவசாலிபோல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 224 பந்தகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 118 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து 5ஆவது விக்கெட்டில் மொஹமத் ரிஸ்வானுடன் மேலும் 65 ஓட்டங்களை கம்ரன் குலாம் பகிர்ந்தார்.
மொஹமத் ரிஸ்வான் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இங்கிலாந்து 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM