(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் மிகவும் பரபரப்பானதும் தீர்மானம் மிக்கதுமான இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான பி குழு போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் கிட்டத்தட்ட நொக் அவுட் போட்டியாக அமையவுள்ளது.
ஏனேனில் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி பி குழுவிலிருந்து அரை இறுதியில் விளையாட தகுதபெறும். அதேவேளை, தென் ஆபிரிக்காவின் தலைவிதியையும் இந்தப் போட்டியே தீர்மானிக்கவுள்ளது.
பி குழுவில் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் முன்னாள் சம்பியன் இங்கிலாந்து வெற்றிபெற்று, தென் ஆபிரிக்கா தொடர்ந்தும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 2ஆம் இடத்தில் இருந்தால் அவை இரண்டும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.
ஒருவேளை மேற்கிந்தியத் தீவுகள் மிகக் குறைந்த நிகர ஓட்டவேக வித்தியாசத்தில் வெற்றிபெற்று அணிகள் நிலையில் இங்கிலாந்து 2ஆம் இடத்தை அடைந்தால் தென் ஆபிரிக்கா முதல் சுற்றுடன் வெளியேறும். .
இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழு போட்டி முடிவுகளின் பிரகாரம் இங்கிலாந்து சற்று பலம்வாய்ந்த அணியாக காணப்படுகிறது. அத்துடன் இக் குழுவில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி இங்கிலாந்து ஆகும்.
தென் ஆபிரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 136 ஓட்டங்களை இங்கிலாந்து 15 ஓவர்களுக்குள் கடந்து 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியிருந்தது.
மேலும் மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 28 போட்டிகளில் இங்கிலாந்து 19 - 8 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
சமநிலையில் முடிவடைந்த ஒரு போட்டியில் சுப்பர் ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றது.
குழாம்கள்
இங்கிலாந்து: ஹீதர் நைட் (தலைவி), லோரென் பெல், மாயா பௌச்சர், அலிஸ் கெப்சி, சார்ளி டீன், சொஃபியா டன்க்லி, சொஃபி எக்லஸ்டோன், டெனில் கிப்சன், சாரா க்ளென், பெஸ் ஹீத், அமி ஜோன்ஸ், ஃப்ரியா கெம்ப், நெட் சிவர் ப்ரன்ட், லிண்ட்சே ஸ்மித், டெனி வியட்.
மேற்கிந்தியத் தீவுகள்: ஹெய்லி மெத்யூஸ் (தலைவி), ஆலியா அலின், ஷாமிலா கொனெல், டியேந்த்ரா டொட்டின், ஷெமெய்ன் கெம்பெல், அஷ்மினி முனிசார், அஃபி ஃப்ளெச்சர், ஸ்டெஃபானி டெய்லர், சினெலி ஹென்றி, சேடீன் நேஷன், கியானா ஜோசப், ஸாய்டா ஜேம்ஸ், கரிஷ்மா ராம்ஹராக், மெண்டி மாங்க்ரு, நெரிஸ்ஸா க்ராவ்டன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM