எம்மில் யாரையேனும் அவர்களது வாழ்க்கையில் மன நிறைவாக இருக்கிறீர்களா? என யாரைக் கேட்டால் ஏதேனும் ஒரு குறை இருக்கிறது என குறைகளை பட்டியலிடுவார்கள்.
அந்தப் பட்டியலில் வருவாய் பற்றாக்குறை, சொந்த வீடு இல்லாத நிலை , திருமண தடை, புத்திர பாக்கிய இல்லாத நிலை, நீடித்த சுகவீனம் , வேலையின்மை, ஆகியவையே முதன்மையாக இடம்பெறும்.
இதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒவ்வொருவருடைய குறைகளையும் இறை சக்தியிடம் ஒரு முகமான மனதுடன் பிரார்த்தனையுடன் தெரிவித்தால் அந்தக் குறை நிறைவாக மாறி, மனம் மகிழ அருள் பாலிக்கும். இதற்கும் பல ஆலய வழிபாட்டு பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
எம்மில் பலரும் பிரதோஷ நாளன்று அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று அங்கு நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் நடைபெறும் அபிஷேகங்களிலும் விசேட அலங்கார, ஆராதனைகளிலும் பங்கு பற்றி தங்களது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக் கொள்வர்.
இதனால் தற்போது பிரதோஷ நாளன்று சிவாலயங்களில் கூடும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் அதே பிரதோஷ நாளன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் அல்லது நரசிம்மருக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பங்குபற்றினாலும் பலன் விரைவாக கிடைக்கும் என குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக சொந்த வீடு இல்லாதவர்கள், சொந்த வீடு வேண்டும் , என்று விரும்புபவர்கள் திங்கட்கிழமையும் , பிரதோஷமும் இணைந்து வரும் நாளில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள நரசிங்க பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் பங்கு பற்ற வேண்டும்.
அதிலும் குறிப்பாக தம்பதியராய் பங்கு பற்றி, அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை தானமாக வழங்கி, பிரார்த்தனை செய்து கொண்டால் பலன் கிடைக்கும். இத்தகைய பிரதோஷத்தன்று தொடர்ந்து மூன்று முறை லட்சுமி நரசிம்ம பெருமானை அல்லது நரசிங்க பெருமானை தரிசித்தால் உங்களது எண்ணம் ஈடேயேறுவதை அனுபவத்தில் காணலாம்.
அதாவது தொடர்ந்து மூன்று பிரதோஷ தினத்தன்று லட்சுமி நரசிம்ம பெருமாள் வழிபட்டால் பலன் கிடைப்பது உறுதி.
அதே தருணத்தில் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் சனிக்கிழமையும், பிரதோஷமும் இணைந்து வரும் நாளில் லட்சுமி நரசிம்ம பெருமானுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் மற்றும் விசேட ஆராதனைகளில் நிவேதனம் படைத்து அதனை பக்தர்களுக்கு தானமாக வழங்கினால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதை அனுபவத்தில் உணர்ந்து மகிழ்ச்சி அடையலாம்.
உங்களுடைய பிள்ளைகள் மாணவ, மாணவிகள் தங்களது கல்வியில் , கல்வி கற்பதில் , தேர்வு எழுதுவதில், ஏதேனும் தடையோ தாமதமோ இடையூறோ இருந்தாலும் அல்லது உங்களது பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பில் ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டாலோ நீங்கள் புதன் கிழமையும், பிரதோஷமும் இணைந்து வரும் நாளில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள நரசிங்க பெருமானுக்கு நடைபெறும் விசேட அபிஷேகத்தில் பங்கு பற்றி பிரார்த்தனை செய்தால் அனைத்து தடைகளும் விலகி உயர் கல்வியை கற்பதுடன் அதற்கான நற் பலன்களையும், எதிர்பார்த்த பலன்களையும் பெறுவீர்கள்.
நாட்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளுடன் இருப்பவர்கள் அல்லது மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாது என கைவிடப்பட்டவர்கள் மனம் தளராமல் வியாழக்கிழமையும், பிரதோஷமும் இணைந்து வரும் நாளன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் லஷ்மி நரசிம்ம பெருமானை வணங்கினால் ஆயுள் கூடுவதுடன் நோயின் தாக்கம் குறைந்து மகிழ்ச்சியை உணர்வீர்.
கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவம் சிக்கலாகும் என வைத்தியர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டால் உடனே பதற்றமும், கவலையும் கொள்ளாமல் வெள்ளிக்கிழமையும், பிரதோஷமும் இணைந்து வரும் நாளில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தில் உள்ள நரசிங்க பெருமானுக்கு நடைபெறும் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பங்கு பற்றுங்கள்.
அதில் 'பிரசவம் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும், குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும், தாய் , சேய் இருவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும், பிரார்த்தனை செய்யுங்கள்' உங்களது பிரார்த்தனை நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
லட்சுமி நரசிம்ம பெருமானை பிரதோஷ தினத்தன்று மட்டுமே வணங்காமல் மேலே சொன்ன பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் அந்தந்த கிழமைகளில் தொடர்ச்சியாக சென்று வணங்கினாலும் பலன் கிடைக்கும் என ஆன்மீக முன்னோர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM