எம்மில் சிலருக்கு நெஞ்சகப் பகுதியில் வலி ஏற்படும். உடனே எம்மில் பலரும் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறதோ! என அஞ்சுவர். இதற்காக உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வர்.
ஆனால் மாரடைப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி எதுவும் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களுக்கு அப்பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படும். உடனடியாக வைத்தியர்கள் நுரையீரல் சிகிச்சை நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.
அவர்களும் நுரையீரல் தொடர்பான பரிசோதனை மேற்கொள்வர். அந்த பரிசோதனையிலும் நுரையீரலில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என கண்டறிவர்.
இருப்பினும் அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி குறையாது. இந்நிலையில் இத்தகைய நெஞ்சகப் பகுதியில் கோஸ்டோகாண்ட்ரிடீஸ் எனும் வலி பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என வைத்தியர்கள் அவதானிப்பர்.
கோஸ்டோகாண்ட்ரிடிஸ் !?
கோஸ்டோகாண்ட்ரிடிஸ் என்றால் மார்பகத்தில் உள்ள எலும்பும், விலா எலும்பும் இணையும் இடத்தில் உள்ள குருத்தெலும்புகளில் உண்டாகும் வீக்கமாகும்.
இதனால் ஏற்படும் வலி மாரடைப்பை போன்று இருக்கும். பொதுவாக உங்களுடைய நெஞ்சின் இடப்புறத்தில் விலா எலும்புகளின் மேல் பகுதியில் இத்தகைய வலி ஏற்படுகிறது.
விலா எலும்பின் குருத்தெலும்பு மார்பகத்துடன் இணையும் இடத்தில் வலி ஏற்படும். சில தருணத்தில் இத்தகைய வலி தீவிரமடையும்.
சிலருக்கு இத்தகைய வலி தோலின் இடப் பகுதியிலும் பரவக் கூடும். இதனால் பலரும் இதனை மாரடைப்பு என தவறாக அவதானிக்கலாம். ஆனால் இது கோஸ்டோகாண்ட்ரிடீஸ் எனப்படும் குருத்தெலும்பு வீக்கத்தினால் ஏற்படும் வலியாகும்.
இதனை சில தருணங்களில் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானிக்கலாம்.
வேறு சிலருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் அவதானித்து அதற்கான சிகிச்சையை தீர்மானிப்பர்.
பெரும்பாலும் இத்தகைய தருணங்களில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
மேலும் மருந்தியல் சிகிச்சையுடன் இயன்முறை சிகிச்சையையும் இணைந்து வழங்கும்போது இத்தகைய பாதிப்பு முழுமையாக நிவாரணம் பெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM