மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசீர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசம் முழுவதும் பாரிய டெங்கு சோதனை நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள 14 சகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் இன்று வரை கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 5000 வீடுகள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் நகர சபை ஊழியர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்கள் இணைந்து பாரிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை மேற்கொண்டுள்ளனர் .
தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதாலும் பருவமழை ஆரம்பிக்க இருப்பதாலும் தொடர்ச்சியாக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்கள் சுற்றுச்சூழலை மிக தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM