தென்கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள் தயாரித்துள்ளதுரோகியே” எனும் தலைப்பிலான குறும்படம் கடந்த செவ்வாய்க்கிழமை “யூடியூப்” சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட குறித்த குறும்படம் முயற்சியை கைவிட்டு அடுத்தவரைக்குறை கூறும் எண்ணப்பாட்டினை தெளிவூட்டும் வகையில் அமைந்துள்ளது. 

தென்கிழக்கு பல்கலைக்கழக  முகாமைத்துவ மற்றும் வர்த்தகபீட இறுதியாண்டு மாணவன் ஏ.எம். அஸார்தீனின் கதை திரைக்கதை இயக்கத்திலும், தனிநாயகத்தின் ஒளிப்பதிவிலும், நிலூபாவின் ஒப்பனையிலும்நுஸ்கியா, நுஸ்ரதுல்லா, இஃபாம், நிபான்சஹீல், மிஸ்பான் ஆகியோரின் ஒத்துழைப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தில் அஸ்ரப், நுஸ்ஹான், திலினி, லோகேஷ், நிப்ராஸ், ஜம்ஹர், இர்பான், சாலிகா, இமல்கா, ரசீம், சலாம்தீன், சுமுது, ரிசான், நிரோஷா பண்டார  உள்ளிட்டோர் நடிகர்களாக பங்கேற்றுள்ளனர். 

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குறும்படத் துறையில் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் என மூன்று சமூகத்தினரும் பங்கேற்றிருப்பது விசேட அம்சமாகும்.