கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து பெரும் போக பயிர்ச்செய்கை கூட்ட தீர்மானத்திற்கு மாறாக குளப் பராமரிப்பு என்ற போர்வையில் அதிக நிதியை அறவிடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர் பாசன குளமான இரணை மடுக்குளத்தின் கீழான பெரும் போக பயிர் செய்கைக் கூட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாய்க்கால் பராமரிப்புக்காக ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாவும் கமவிதானை வேதனமாக ஏக்கர் ஒன்றுக்கு 300 ரூபாவும் மாத்திரமே அறவிடுவதாக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் குறித்த தீர்மானத்தை மீறி விவசாயிகளிடம் இருந்து குளபராமரிப்பு என்ற போர்வையில் பெருந்தொகை நிதிய கூட்டத் தீர்மானத்துக்கு மாறாக கமக்கார அமைப்புகள் விவசாயிகளிடமிருந்து அறவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது கடந்த சிறுபோக செய்கையின் போது குறித்த குளப்மதிப்புக்குரிய நிதி அறவீடுவது தொடர்பில் கூட்டத் தீர்மானத்துக்கு அமைவாக நிதி அறவிடப்பட்டது இருந்தபோதிலும், பெரும் போகத்தில் இவ்வாறான நிதி அறவீடுகளுக்கு எந்த விதமான அனுமதிகளும் வழங்கப்படவில்லை.
ஆனால் அதனை மீறி தற்போது குறித்த நிதி அறவிடப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட அரச அதிபர் பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியோருக்கு விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM