தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் ஒருவர் காயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் யூனிபீல்ட் தோட்டத்தில் இருந்து தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஹட்டனிலிருந்து இருந்து எல்ல நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் பாதுகாப்பு கடவை காணப்பட்டாலும் அதற்கு காவலாளி இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது, லொறியின் சாரதி, ரயில் முன்னோக்கி வருவதை கண்டு லொறியை பின்னால் செலுத்த முற்பட்ட போது லொறியானது ரயிலுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, லொறியின் பின்புறத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஐவர் பயணித்ததாகவும், விபத்தில் லொறியின் உதவியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக லொறியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்த லொறியின் உதவியாளரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் ரயிலை முன்னோக்கி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM