சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு; அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Published By: Vishnu

14 Oct, 2024 | 08:21 PM
image

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தீவைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இதுவரை 12 மாவட்டங்கள் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 126.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் களனிமுல்ல, கடுவெல உள்ளிட்ட அண்டிய பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அத்தனகலு ஓயா பெருக்கெடுத்து ஓடியதால் கொழும்பு-குருநாகல் பிரதான வீதி ஜாஎல கொட்டுகொட சந்தியில் வெள்ளம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், கம்பஹா நகரில் வெள்ளம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.

களுகங்கை மற்றும் குடுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் களுத்துறை மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ்வான பிரதேசங்கள் பலவும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திங்கட்கிழமை (13) இரவும் செவ்வாய்க்கிழமை (14) நாட்டின் பல மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் மழையினால் அப்பகுதி மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பனிமூட்டமான நிலையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை பஸ் விபத்து ; சாரதிக்கு...

2024-11-12 16:11:43
news-image

பிள்ளையானிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம்

2024-11-12 16:07:32
news-image

14 வயது சிறுமி மீது பாலியல்...

2024-11-12 16:00:32
news-image

தமிழக மீனவர்கள் தொடர் கைது இந்திய...

2024-11-12 15:45:55
news-image

இலங்கை சிறையில் அடைபட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்...

2024-11-12 14:46:57
news-image

மசாஜ் செய்வதாகக் கூறி வைத்தியரிடம் கொள்ளை...

2024-11-12 13:30:38
news-image

பியூமி ஹன்சமாலி, விரஞ்சித் தம்புகலவின் விசாரணைகளைத்...

2024-11-12 13:26:34
news-image

அக்கரப்பத்தனையில் வீடுடைத்து திருட்டு ; சந்தேக...

2024-11-12 12:20:13
news-image

கொழும்பு - அவிசாவளை வீதியில் பஸ்...

2024-11-12 12:06:39
news-image

காணாமல்போயிருந்த மூதாட்டி வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்பு!

2024-11-12 11:54:43
news-image

கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

2024-11-12 11:37:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-12 12:03:44