திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து சம்பவம் திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி பாலத்தோப்பூர் பகுதியில் மற்றுமொரு வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்டபோது இவ்விபத்து ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் எதுவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிய வருகின்றது.
தற்போது திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றமையால் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்ற பதாகைகளை பார்த்து கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM