(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு பாகிஸ்தானின் கைகளிலேயே தங்கி இருக்கிறது.
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் ஏ குழுவிலிருந்து நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
இக் குழுவிலிருந்து அரை இறுதிக்கு தகுதிபெறப் போகும் 2ஆவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (14) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் நியூஸிலாந்து அரை இறுதிக்கு முன்னேறும். பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெறும் என எதிர்பார்க்க முடியாது.
எனினும், இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு இப்போதைக்கு பாகிஸ்தானின் கைகளிலேயே தங்கியிருக்கிறது.
அணிகள் நிலையில் இந்தியா 4 புள்ளிகளைப் பெற்று 0.322 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
நியூஸிலாந்தும் 4 புள்ளிகளைப் பெற்ற 0.282 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் 3ஆம் இடத்திலிருக்கிறது.
நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 11 போட்டிகளில் 9 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து முன்னிலை வகிக்கிறது.
கடைசியாக இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட ஐந்து சந்தர்ப்பங்களிலும் நியூஸிலாந்தே வெற்றிபெற்றுள்ளது.
இந்த இரண்டு அணிகளில் சகலதுறைகளிலும் பலம் வாய்ந்த அணியாக நியூஸிலாந்து விளங்குகிறது.
எனவே நியூஸிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
அதிசயம் நிகழ்ந்தாலன்றி பாகிஸ்தான் வெற்றிபெறும் என எதர்பார்க்க முடியாது.
அணிகள்
நியூஸிலாந்து: சுசி பேட்ஸ், ஜோர்ஜியா ப்ளிம்மர், அமேலியா கேர், சொஃபி டிவைன் (தலைவ), ப்றூக் ஹாலிடே, மெடி க்றீன், இசபெல்லா கேஸ், லீ கெஸ்பரெக், லீ தஹுஹு, ரோஸ்மேரி மாய்ர், ஈடன் காசன்.
பாகிஸ்தான்:
முனீபா அலி (தலைவி), சித்ரா ஆமின், சதாப் ஷமாஸ், நிதா தார், ஒமெய்மா சொஹெய்ல், ஆலியா ரியாஸ், ஈராம் ஜாவேட், டுபா ஹசன், சியேடா ஆரூப் ஷா, நஷ்ரா சாந்து, சாடியா இக்பால்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM