க.கிஷாந்தன்
2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக கொட்கலை CLF வளாக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கலந்துரையாலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இ.தொ.கா முக்கியஸ்த்தர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், தோட்டக்கமிட்டி ,மாவட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டனர்.
2024 பாராளுன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM