பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்திற்கு எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.

‘தேவி’ படத்திற்கு பிறகு பிரபுதேவா ‘யங் மங் சங்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘காதல் சொல்லப் போறோம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது ’குலேபகாவலி’  என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘குலேபகாவலி’ 1955 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம். தற்போது, அதே தலைப்பை இப்படத்திற்கு வைத்திருப்பதால் அப்படம் போல் இருக்குமா? என்று கேட்டால், இப்படம் முழுக்க காமெடியாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இப்படத்தில் ரேவதி, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை பாங்காக்கில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.