டிசம்பரில் வெளியாகும் உபேந்திராவின் 'U1'

Published By: Digital Desk 2

14 Oct, 2024 | 05:30 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான உபேந்திரா கதையின் நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் 'U1' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' U1' எனும் திரைப்படத்தில் உபேந்திரா, சன்னி லியோன், முரளி சர்மா, பி. ரவிசங்கர், அச்யுத் குமார், சாது கோகிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஹெச் . சி. வேணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜினீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். 

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி. மனோகரன் மற்றும் கே. பி. ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இருபதாம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

இதே திகதியில் வேறு சில பான் இந்திய திரைப்படங்களும் வெளியாவதால் 'அனைத்து படத்தையும் பாருங்கள். எங்கள் படத்தையும் பாருங்கள்' என படக் குழுவினர் தெரிவித்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right