பொங்கலுக்கு வெளியாகும் நடிகர் ராம் சரணின் 'கேம் சேஞ்சர் '

Published By: Digital Desk 2

14 Oct, 2024 | 05:29 PM
image

ஓஸ்கர் விருதினை வென்ற 'ஆர் ஆர் ஆர் ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான 'குளோபல் ஸ்டார் ' ராம்சரண் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தில் ராம் சரண், கியாரா  அத்வானி, ஜெயராம், ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், நாசர் , நவீன் சந்திரா, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். 

அரசியல் விழிப்புணர்வை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்தயேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ராம் சரணின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் ராம் சரணின் தந்தையும், முன்னணி நட்சத்திர நடிகருமான சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வாம்பரா' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. 

இதில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் திகதியன்று வெளியாகும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் திரை உலகில் குறிப்பாக திரையுலக வணிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. தந்தையும் மகனும்  நடித்த திரைப்படங்கள் ஒரே திகதியில் வெளியாகிறதா..!? என அவர்கள் குழப்பமடைந்தனர்.  

இந்நிலையில் ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 10 ஆம் திகதியன்று வெளியாகும் என்றும், சிரஞ்சீவி நடித்த 'விஸ்வாம்பரா ' திரைப்படம் மே மாதம் வெளியாக கூடும் என்றும் உறுதிப்படுத்தப்படாத வணிக வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30