சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை வடமாகாண கூட்டுறவாளர்களினால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்ற மேதின பேரணி ஊர்வலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறச் சங்கத்தின் ஊர்தி மாவட்டத்தின் முதல்தர ஊர்தி என்ற நிலையை பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் மேதினக் கூட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க, மேதின ஊர்திக்கு 20 ஆயிரம் ரூயபா பணப் பரிசும் வெற்றிக்கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வடமாகாணத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட மே தின ஊர்திகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.