பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Published By: Vishnu

14 Oct, 2024 | 12:15 AM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள்  1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ப்றெண்டக் கிங், எவின் லூயிஸ் ஆகியோர் குவித்த அதிரடி அரைச் சதங்கள் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதற்கு பெரிதும் உதவின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைக் குவித்தது.

கமிந்து மெண்டிஸ், அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள் இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தது.

இலங்கையின் முதல் 3 விக்கெட்கள் வீழ்ந்தபோது 8ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க (11), குசல் பெரேரா (6), குசல் மெண்டிஸ் (19) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

கமிந்து மெண்டிஸ் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களையும் சரித் அசலன்க 9 பவுண்டறிகளுடன் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட பானுக்க ராஜபக்ஷ 17 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ப்றெண்டன் கிங், எவின் லூயிஸ் ஆகிய இருவரும் அதிரடி வேகத்தில் துடுப்பெடுத்தாடி 55 பந்துகளில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எவின் லூயிஸ் 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸுடன் 50 ஓட்டங்களைப் பெற்ற ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஷாய் ஹோப் 7 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

மொத்த எண்ணிக்கை 128 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸின் இடதுகை பந்துவீச்சில் ப்றெண்டன் கிங் ஆட்டம் இழந்தார்.

அவர் 33 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ரொஸ்டன் சேஸ் (19), அணித் தலைவர் ரோவ்மன் பவல் (13), ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் (14 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கி மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-11-11 21:41:20
news-image

அங்குரார்ப்பண ரி10 லங்கா பிறீமியர் லீக்...

2024-11-11 19:12:01
news-image

வருணின் 5 விக்கெட் குவியல் பலனற்றுப்போனது;...

2024-11-11 12:14:31
news-image

இலங்கை - நியூசிலாந்து T20 தொடர்...

2024-11-10 23:20:44
news-image

அவுஸ்திரேலிய மண்ணில் 22 வருடங்களின் பின்னர்...

2024-11-10 20:06:35
news-image

பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது ; ஐசிசி...

2024-11-10 18:58:38
news-image

சிநேகபூர்வ வலைப்பந்தாட்டப் போட்டி : வேம்படி...

2024-11-10 20:03:02
news-image

முதலாவது ரி-20 இல் பந்துவீச்சாளர்களின் திறமையால்...

2024-11-10 19:05:36
news-image

முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்: நியூஸிலாந்து...

2024-11-09 18:58:12
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர்ச்சியாக இரண்டு...

2024-11-09 18:48:03
news-image

'வெற்றிநடையை தொடர்வதும் தரவரிசையில் முதல் 3...

2024-11-09 17:36:41
news-image

தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி...

2024-11-08 20:20:23