(எம்.மனோசித்ரா)
எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில் வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பினை மறைத்து, கட்சி தலைவர் மீது பழி சுமத்துவது பிரயோசனமற்றறு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலின்போது அஜித் மன்னம்பெருமவின் செயற்பாடுகள் திருப்தியளிக்கக்கூடியவையாக இல்லாததன் காரணமாக அவருக்கு வேட்புமனுவில் இடமளிக்க வேண்டாம் என பலரும் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் கம்பஹா வேட்புமனு பெயர்ப் பட்டியலில் அவரை உள்ளடக்குவதற்கு கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்தார்.
அவ்வாறிருக்கையில் தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளமை கவலைக்குரியது. வேட்புமனு தாக்கலின் பின்னர் அவர் இவ்வாறானதொரு அறிவித்தலை வெளியிட்டு, பிரிதொரு வேட்பாளருக்கான வாய்ப்பினைப் பறித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தொகுதி அமைப்பாளர் பதவியோ அமைச்சுப் பதவியோ அவசியம் இல்லை.
இதனை ஒரு காரணமாகக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்ப்பது பொறுத்தமற்றது. தேர்தலை எதிர்கொள்வதற்கான பலம் இருக்க வேண்டும். மக்களின் ஆசீர்வாம் இருந்தால் பதவிகள் தேவையில்லை.
எனவே அவர் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம். மக்களிடமிருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பின் காரணமாகக் கூட அவர் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம். அந்த பழியை கட்சி தலைவர் மீது சுமத்துவதால் பயன் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்துக்கு அதிகளவான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM