சிலாபம் கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென ஏற்பட்ட பாரிய கடல் அலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

சிலாபம் இலிப்பதெணிய - கிழக்கு முங்கத்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன யுவதி தனது குடும்பத்தினருடன் சிலாபம் கடற்பகுதிக்கு நேற்று மாலை சென்றிருந்த வேளை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த யுவதியை தேடும் பணிகளை சிலாபம் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.