தென்லெபனானில் உள்ள ஐக்கியநாடுக்ள அமைதிப்படையினரை உடனடியாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விலக்கிக்கொள்ளவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவேண்டுகோள் விடுத்துள்ளார்.
செயலாளர் நாயகம் அவர்களே ஆபத்தான சூழ்நிலையிலிருந்து ஐக்கியநாடுகள் அமைதிகாக்கும் படையினரை விலக்கிக்கொள்ளுங்கள் உடனடியாக இதனை செய்யவேண்டும்என இஸ்ரேலிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேல் கடந்த வாரம் முதல் வேண்டுகோள் விடுத்துவருகின்றது.
ஐக்கியநாடுகள் அமைதிப்படையினர் குறிப்பிட்ட எல்லைபகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து குழப்பநிலை உருவாகியுள்ளது.
அமைதிப்படையினர் அந்த தளத்திலிருந்து வெளியேறவேண்டு;ம் என இஸ்ரேலிய படையினர் வேண்டுகோள் விடு;த்துள்ளனர்.அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படையினரை நோக்கி ஹெஸ்;புல்லாக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் ஐக்கியநாடுகளின் அமைதிப்படையினரை வெளியேறச்சொல்லியுள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையின் பேச்சாளர் அன்ரே டெனென்டி இஸ்ரேலையும் லெபனானையும் பிரிக்கும் மூன்று கிலோமீற்றர் நீலகோட்டிலிருந்து தங்களை இஸ்ரேல் விலகசொல்லியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமைதிப்படையினர் இதனை ஏற்க மறுத்துள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM