நாடு முழுவதும் பெய்து வரும் அடை மழை காரணமாக கட்டானை ஊடாக பாயும் தடுகம் ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் 4000 ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டான பிரதேச செயலாளர் சுமுது அத்துகோரள இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.
சுமார் , 17 கிராம சேவையாளர் பிரிவுகளில் 1385 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , இந்த அனர்த்தம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுநாயக்க – நிட்டம்புவ வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நீர்கொழும்பில் இருந்து கிபுலபிடிய மற்றும் படபதுர கல்மங்கட புகையிரத ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வீதியும் வெள்ள நிலைமை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் , கொடுகொட ரோமன் கத்தோலிக்க கல்லூரி, வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் முகாமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டான பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், மாதுவ, கொடுகொட பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை இராணுவத்தினரின் ஆதரவுடன் படகுச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் , தற்போதும் அப்பகுதி முழுவதும் கடும் மழை பெய்து வருகின்றதுடன், இதன் காரணமாக மடவள, மாதுவ, அரம்ப, குஸ்வல, முதுவாடிய, கொடுகொட, கோவின்ன, கிம்புலபிட்டிய, படபதுர, கல்மங்கட, பல்லேவெவ போன்ற பிரதேசங்களில் போக்குவரத்துக்கு , அந்த பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM