வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை செவனபிட்டியவைச் சேர்ந்த குழுவினர் நேற்று பகல் உல்லாச பயணம் மேற்கொண்டு பாசிக்குடா கடற்கரையில் பொழுதை போக்கியதுடன், அங்கு மதுபானம் அருந்திய பின்னர் கடலில் நீராட முயற்சித்துள்ளனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மதுபோதையில் நீராடச் சென்றவர்களை தடுத்துள்ளனர்.
அப்போது அக்கூட்டத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவ்வேளை மதுபோதையில் இருந்தவர்கள் பொலிஸாரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, தாக்கிய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், பொலிஸாரின் கடமைக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM