31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே அரச வீடுகளை கையளித்துள்ளதாக தகவல்!

13 Oct, 2024 | 04:31 PM
image

(நமது நிருபர்) 

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரச வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே அவற்றை மீளக் கையளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் அமைச்சர்கள் வசிப்பதற்காக கொழும்புக்குள் வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை மீளக் கையளிக்குமாறு தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது.   

எதிர்வரும் காலத்தில் அமைச்சர்களுக்கு அவ்விதமான வீடுகள் மீண்டும் வழங்கப்படுமா, அது தொடர்பில் புதிய அரசின் கொள்கை என்ன என்று உயர்மட்ட அதிகாரியொருவரை வினவியபோது, அதுகுறித்து பின்னரேயே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைகளின் அரசாங்கச் சலுகைகள் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51