நீதிமன்ற உத்தரவை மீறி கொக்கிளாயில் சிங்களமீனவர்கள் உழவு இயந்திரத்தினால் கரைவலை இழுப்பு

Published By: Priyatharshan

02 May, 2017 | 10:08 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் வாடி அமைப்பது தொடர்பான வழக்கினையடுத்து தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் குறித்த பகுதியில் தொழில்புரிய முலைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தநிலையில்  நீதிமன்ற உத்தரவை மீறி சிங்கள மீனவர்கள் நேற்று தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

உழவு இயந்திரம் மூலம் வலையினை இழுத்து தொழில் செய்யும் முறை தடை செய்யப்பட்ட தொழிலாக இருகின்ற போதிலும் நேற்று இரண்டு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற்காக பிரதேச செயலாளரினால் வாடி அமைப்பிற்கென வழங்கப்பட்ட நிலம் தென்னிலங்கை மீனவர்களிற்கான கரைவலைப்பாட்டுப் பகுதிக்குள் உள் அடங்குவதனால் குறித்த வாடியினை தடைசெய்ய வேண்டும் என 3 தென்னிலங்கை மீனவர்களின் சார்பில் நீரியல் வளத்திணைக்களம் கடந்த ஆண்டு முல்லைத்தீவு நீதி மன்றினில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இதனால் உள்ளூர் மீனவர்கள் அப்பகுதியில் தொழில்புரிய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதோடு வழக்கும் தொடர்ந்தும் இடம்பெற்றது. 

இதன் பிரகாரம் மார்ச் மாதம் 14 ஆம் திகதிய வழக்கின்போது வாடி அமைப்பிற்காக வழங்கப்பட்ட பிரதேசம் தென்னிலங்கை மீனவர்களின் கரைவலைப்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பகுதியானது 375 மீற்றருக்கும் அப்பால் அமைந்துள்ளது என பிரதேச செயலாளரினால் அரச நில அளவையாளரின் அளவீட்டு ஆவணம் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளரினால் மன்றில் சமர்ப்பித்த நில அளவை வரைபடத்தினை ஏற்க மறுத்திருந்தமையினால் சகல தரப்பினரின்  பிரசன்னத்துடன் மீண்டும் நில அளவை செய்து மன்றிற்கு சமர்பிக்குமாறு  பிரதேச செயலாளருக்கு உத்தரவிடப்பட்டதோடு மேற்படி பகுதியில் தொழில் புரிவதற்கு இரு தரப்பிற்கும் இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த 18ம் திகதி மீண்டும் அளவை மேற்கொண்ட சமயமும் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் இடையே  முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கின்போதும் இரு தரப்பிற்கும் விதிக்கப்பட்ட தடை  நீடிக்கப்பட்டதோடு அடுத்த தவணையாக நாளை மறுதினமான 4 ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைக்கபட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி  சிங்கள மீனவர்களினால் சட்டத்தினை அவமதித்து நேற்று  கரவலை இழுக்கப்பட்டது. இதனை அவதானித்த முல்லைத்தீவு கொக்கிளாய் மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கிராம சேவகர், பிரதேச செயலகம், பொலிசார் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கிராம சேவகர் மற்றும்  பிரதேச செயலாளரின் பிரதிநிதிகள் உழவு இயந்திரம் மூலம்  கரைவலை இழுப்பதனை அவதானித்தனர். கொக்கிளாய் மீனவ சங்கப் பிரதிநிதிகளால் பொலிசிலும் முறைப்பாடு பதிவு செய்யப்படுள்ளதுடன் நீதி மன்றின் கவனத்திற்கும் கொண்டு செல்லபடவுள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56